பிரபல தனியார் தொலைக்காட்சியானா விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.
அந்த வகையில் இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ஆனா சூப்பர் சிங்கர் மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் பெருமளவில் ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது அந்த வகையில் இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் மற்றும் அவருடைய நகைச்சுவை பல்வேறு தரப்பினரையும் எளிதில் ஈர்த்தன.
இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவ்வாறு இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் தேர்வு செய்த வகையில் தொகுப்பாளினி பிரியங்காவும் இதில் ஒரு போட்டியாளராக களமிறங்கினார் அந்தவகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டதன் பிறகு இதில் தொகுப்பாளர் பிரியங்காவா இல்லை கமலஹாசனா என பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவருடைய பேச்சு தான். அந்த வகையில் இந்த பிக்பாஸ் போட்டியில் தன்னுடைய பேச்சுத்திறனை வெளிக்காட்டிய பிரியங்கா நாளடைவில் ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்து விட்டார்.
என்னதான் இருந்தாலும் இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் டாக்டர் திரைப்படத்தில் நடித்த அவருக்கென சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட்டார். இந்நிலையில் நமது தொகுப்பாளினி தனது தம்பியுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.