கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத் திரையில் அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நடிகை ஜாக்குலின். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வெற்றிகரமாக முடித்து வைத்தார். கனாகாணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகிய சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியிலும் மற்றும் ரசிகர் மத்தியிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தேன்மொழி BA ஊராட்சி மன்ற தலைவர் என்ற தொடரில் தற்போது நடித்து வருகிறார். இந்த தொடர் பெண்கள் மத்தியிலும் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏனென்றால் இந்த சீரியலில் பெண்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கிராமத்தில் படிக்காத பெண்கள் மத்தியில் படித்து நல்ல பதவிக்கு வரவேண்டும் என்ற கருத்தை நாடகத்தின் மூலம் உணர்த்தியுள்ளனர்.
இந்தநிலையில் ஜாக்குலின் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவர் கார் கூரை மேல் நின்று மேக்கப் போடாமல் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து தற்போது அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
— Jacquline Fernandas (@jacquline_vj) March 12, 2020