விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் தொகுப்பாளர்களில் முக்கிய ஒருவராக பார்க்கப்படுவது வீஜே பிரியங்கா. இவர் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல சீசன்களாக தொகுத்து வழங்கி வருபவர். இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுப்பாளர் மாகாபா உடன் இணைந்து பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக் என்ற கேம் ஷோவை பிரியங்கா சோலோவாக தொகுத்து வழங்கி வந்தார். இப்படி விஜய் தொலைக்காட்சியிலே சுற்றித்திரிந்த பிரியங்காவிற்கு ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாபெரும் நிகழ்ச்சியான பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் 5 யில் கலந்துகொண்டு போட்டியாளர்கள் மற்றும் மக்களை என்டர்டைன்மென்ட் செய்து மக்களை மகிழ்வித்து வந்தார். மேலும் இந்த பிக் பாஸ் சீசன் 5 இன் இறுதியில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின் செய்தார் அவரை தொடர்ந்து பிரியங்கா தேஷ்பாண்டே ரன்னர் அப் ஆனார்.
பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருந்த காலகட்டத்தில் அவர் தொகுத்து வழங்கி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மற்றும் ஸ்டார்ட் மியூசிக் இரண்டையுமே மற்ற தொகுப்பாளர்கள் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இந்த வருடத்திற்கான விஜய் டெலி அவார்ட்ஸ் ஷூட்டிங் முடிவு பெற்றது. அதில் பிரியங்காவிற்கு சிறந்த பெண் தொகுப்பாளர் என விருது வழங்கியுள்ளார்கள்.
இதைத்தொடர்ந்து சோஷியல் மீடியாவில் பலரும் பிரியங்கா 100 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து சில நாட்கள் வீட்டில் ஓய்வு பெற்ற பின்பே சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சிக்கு வந்த பிரியங்காவிற்கு எப்படி சிறந்த தொகுப்பாளினி விருது வழங்க முடியும் என நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.