திடிரென மருத்துவமைக்கு சென்ற விஜய்.! பரபரப்பாக வைரலாகும் வீடியோ

வாரிசு நடிகராக அறிமுகமாகி தொடர்ந்து தனது அப்பா தயாரித்து வரும் திரைப்படங்களில் நடித்து வந்து ஒரு கட்டத்திற்கு பிறகு அந்த திரைப்படங்கள் பெரிதாக கை கொடுக்காத காரணத்தினால் தனது சொந்த உழைப்பால் வாய்ப்புகளை தேடி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்து வருபவர் தான் நடிகர் விஜய்.

பெரும்பாலும் இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக அமோக்  வெற்றியை பெற்று வரும் நிலைகள் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து நல்ல வெற்றியை பெற்ற திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து தன்னுடைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் ரிலீசாக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஹைத்ராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சரத்குமார்,பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்த வருகிறார் மேலும் ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதும் வாரிசு திரைப்படம் எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பட குழுவினர்கள் ஷூட்டிங் பொழுது எடுக்கும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது மருத்துவமனையில் விஜய், சரத்குமார், பிரபு உள்ளிட்டோர் முக்கிய காட்சியில் நடிக்கும் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அதன் மிக அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார் அந்த வீடியோ இணையதளத்தில் வழியாக மிகவும் வைரல் ஆகி வருகிறது.இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 75 திரைப்படம் உருவாக இருக்கிறது.