தமிழ் சினிமாவில் வெளியான முதல் பேய் படம் எது தெரியுமா.? அந்த படத்துல நடிச்ச ஹீரோ யாரு தெரியுமா.? சொன்ன நீங்க நம்ப மாட்டிங்க..

pei-padam

தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த திரைப்படங்கள் நல்ல வசூல் வேட்டையை பெற்றாலும் ஆனால் எல்லா விதமான காலகட்டத்திற்கும் நல்ல வரவேற்ப்பை பெற கூடிய படமாக இருப்பது பேய் படம் தான் என்பதை நாம் அடித்தே கூறிவிடலாம் எப்பொழுதும் ரசிகர்களுக்கு பேய் படம் என்றால் அவ்வளவு பிடிக்கும்.

குறிப்பாக இப்பொழுது இருக்கும் காலகட்டத்திற்கு அந்த பேய் படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றன.  அந்த வகையில் காஞ்சனா, மூனி, அரண்மனை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. மேலும் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி மக்களை கொண்டாட வைத்துள்ளன.

தற்போது இருக்கும் பேய் படங்களை விட சில வருடங்களுக்கு முன்பு பேய் படங்கள் பார்ப்பவர்களை பயமுறுத்தும் அளவிற்கு இருக்கும் பேய் படத்திலும் காமெடி வைத்தால் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்பதை உணர்ந்து கொண்டு தற்போது இருக்கும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அதுபோன்ற படங்களை கொடுக்கின்றனர்.

ஆனால் உண்மையில் ஒரு பேய்படம் பார்த்தால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் முதன் முதலில் வெளியான பேய் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது முதல் பேய் படம் எது தெரியுமா.

நம்ம முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நடிப்பில் 1951 ஆம் ஆண்டு வெளியான மர்மயோகி திரைப்படம் தான் முதல் பேய் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த போஸ்டர்.

marma yogi
marma yogi