சத்தியமா இந்த குழந்தை எனக்கு பிறந்தது கிடையாது..! ஆத்திரத்தில் பரீனாவின் கணவர் வெளியிட்ட பதிவு..!

farina-03

பிரபல தனியார் தொலைக்காட்சியின் விஜய் டிவியில்  சீரியல்களில் ரசிகர்களுக்கு பிடித்த சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான். இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த சீரியலை பார்க்க பல்வேறு ரசிகர் பெருமக்கள் உருவாகியது மட்டுமில்லாமல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் ஹிட் அடித்துள்ளது.

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல்களும் சினிமா டைட்டில்களை வைத்து வெளியிடப்படுகிறது அந்த வகையில் கடைக்குட்டிசிங்கம் சின்ன தம்பி பெரிய தம்பி ராஜா ராணி மௌன ராகம் என பல சீரியல்கள் இடம் பெற்றுள்ள நிலையில் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் ஒன்று.

மேலும் இந்த சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில்  வில்லியாக நடித்து வருபவர் தான் நடிகை பரீனா. இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் ரகுராம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு கர்ப்பமான நமது நடிகை சமீபத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

farina-01
farina-01

இவ்வாறு தனக்கு குழந்தை பிறந்ததை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தனது குழந்தையுடன் பரீனா வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது அதுமட்டுமின்றி  யூடியூப் சேனல் ஒன்றிலும் ஒரு வீடியோவை வெளிவந்துள்ளது

அந்தவகையில் இந்த வீடியோவை பார்த்த பரீனாவின் கணவர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால் வணக்கம் நான் தான் உங்கள் ரகுராம் இந்த யூடியூபே பக்கத்தை நம்பாதீர்கள் ஏனெனில் அதில் இருப்பது என்னுடைய குழந்தையை கிடையாது.

farina-02

அதுமட்டுமில்லாமல் இது முழுக்க முழுக்க போலியான விஷயங்கள் சார்ந்த பதிவாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வீடியோவை விரைவில் நீக்காவிட்டால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என பரீனாவின் கணவர் பதிவிட்டிருந்தார்.