சினிமா உலகை பொறுத்தவரை ஒரு நடிகர் ஆரம்பத்தில் கமர்சியல் மற்றும் காமெடி கலந்த படங்களை கொடுத்து பிரபலமடைந்தாலும் முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்த பிறகு அவர்கள் பெரிதும் ஆக்சன் கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அந்த வகையில் அஜித் – விஜய் போன்றவர்கள்..
ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து வெற்றியை கண்டாலும் இப்பொழுது தொடர்ந்து ஆக்சன் படங்களை தான் பெரிதும் விரும்புகின்றனர் அதுபோல நடிகர் சிவகார்த்திகேயனும் அத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் தற்பொழுது ஆக்சன் படங்களை தேர்வு செய்து வருகிறார். அதில் ஒன்றாக மாவீரன் திரைப்படம்.
முழுக்க முழுக்க ஒரே ஆக்சன் கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு வித்தியாசமான லுக்கில் நடிப்பது இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது இந்தப் படத்தை மடோன் அஸ்வின் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து புஷ்பா படத்தில் மிரட்டிய சுனில் மற்றும் மிஷ்கின் போன்றவர்கள் வில்லன் கேரக்டரில் நடிக்கின்றனர்.
அது மட்டும் இன்றி நடிகை சரிதா ஒரு அட்டகாசமான குணச்சிதர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் மாவீரன் படத்திலிருந்து ஒரு சூப்பர் தகவல் கிடைத்துள்ளது.
அதாவது மாவீரன் திரைப்படத்தில் ஒரு ஹாலிவுட் பிரபலம் கமிட்டாகி உள்ளாராம் ஆம் அவர் வேறு யாரும் அல்ல.. துருவ நட்சத்திரம், வெந்து தணிந்தது காடு, யசோதா போன்ற படங்களில் பணியாற்றிய “யான்னிக் பென்” என்பவர் தான் இந்த படத்திலும் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிய இருக்கிறாராம். இதனால் மாவீரன் படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் ஒவ்வொன்றும் தெறிக்கும் படி இருக்கும் என சொல்லப் படுகிறது.