திரை உலகில் ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் உருவான தி கிரே மேன் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாக உள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தை netflix தயாரித்தது மட்டும் இல்லாமல் அமெரிக்காவில் இந்த திரைப்படம் ஆனது ஜூலை 15ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது
அதே போல இந்த திரைப்படம் netflix தளத்தில் வருகின்ற 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் ஆனது மிக பிரமாண்டமாக நடைபெற்ற வந்த நிலையில் அமெரிக்கா செய்தியாளர்கள் சந்திப்பில் தனுஷ் அவர்கள் கலந்து கொண்டார்.
அப்பொழுது செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு மிகவும் நகைச்சுவையாக பதில் அளித்து வந்த தனுஷ் அவர்கள் சிரிப்பால் அரங்கத்தை அதிர வைத்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் பிரிமியர் ஷோவில் தனது மகன்களுடன் தனுஷ் கலந்து கொண்டார் அந்த வகையில் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அவர்களும் கலந்து கொண்டார்கள் அப்பொழுது கிரிஷ் எவன்ஸ் மற்றும் ஆனா டி அமர்ஸ் ஆகியோர்கள் தனுசை பற்றி பேசி உள்ளார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு சண்டை காட்சிக்காக தனுஷ் அவர்கள் பல நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டார் மேலும் மிகவும் கஷ்டமான செயலாக இருந்தாலும் தனுஷ் கொஞ்சம் கூட சலிக்காமல் இதில் முழு ஆர்வம் காட்டியுள்ளார் என்பதை கூறியுள்ளது மட்டுமில்லாமல் தனுஷ் தன்னுடைய வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர் அதேபோல கம்பீரமானவர் என ஹாலிவுட்டு பிரபலங்கள் அவரை புகழ்ந்து தள்ளி உள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படம் வெளியானதற்கு பிறகு நடிகர் தனுஷ்க்குஏகப்பட்ட ஹாலிவுட் திரைப்பட வாய்ப்புகள் குவியும் என பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.