மறைந்த நடிகர் முரளியின் டைரியில் இருந்த தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி.! தகவலை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.!

murali

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த நடிகர்களில் ஒருவர்தான் முரளி இவர் பல திரைப்படங்களில் பல வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்கள் மத்தியில் எப்படியோ ஒரு வழியாக புகழ்பெற்று விளங்கி விட்டார். அந்த வகையில் பார்த்தால் முரளி நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டானது ஒரு கட்டத்தில் அவருக்கு மாரடைப்பு வந்து கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் திரையுலகை விட்டு மறைந்து விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் இவரை பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது அதாவது நடிகர் முரளி பொதுவாகவே டைரி எழுதும் பழக்கம் இருப்பவராம் இவர் உயிரிழந்த பின்பு இவருக்காக இவர் மனைவி செய்த விஷயம் பற்றி தற்போது தகவல் கிடைத்துள்ளது.அதாவது நடிகர் முரளி மறைவதற்கு முன்பே திருப்பூர் சுப்பிரமணியம் என்பவரிடம் 17 லட்சம் கடன் கொடுக்க வேண்டும் என்ற விஷயத்தை நடிகர் முரளி தனது டைரியில் எழுதி வைத்துள்ளார்.

இவர் மறைந்த பிறகு இந்த டைரியை எடுத்து பார்த்த இவரது மனைவி ஷோபா தனது கணவன் யாருக்கும் கடனாளியாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் ஒரு சில நாட்கள் கழித்து திருப்பூர் சுப்பிரமணியத்தை தனது வீட்டிற்கு அழைத்து தனது கணவன் வாங்கிய 17 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார் அப்பொழுது திருப்பூர் சுப்பிரமணியம் வியப்புடன் நடிகர் முரளி கொடுத்த பத்திரத்தை கூட நான் கிழித்துப் போட்டு விட்டேன்.

எதற்காக திடீரென்று என்னை அழைத்தீர்கள் என்று கேட்டுள்ளாராம்.அப்பொழுது நடிகர் முரளியின் மனைவி தனது கணவன் யாரிடமும் கடனாளியாக இருக்க கூடாது என்ற எண்ணத்தில் நான் எனது கணவன் வாங்கிய இடத்தை வித்து விட்டு எனது கணவன் வாங்கிய கடன்களை சொத்துகளை வைத்து நான் தற்பொழுது அடைத்து வருகிறேன்.

அந்த வகையில் பார்த்தால் எல்லோரும் எங்களை எப்பொழுது கடன் கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டார்கள் ஆனால் நீங்கள் மட்டும்தான் வாயே திறக்கவில்லை அதனால்தான் உங்களை அழைத்து முதலில் பணம் கொடுக்கிறேன்.என்று கூறி தனது மகன் அதர்வாவை ஆசீர்வாதம் செய்ய சொன்னாராம்.

எதற்காக என்று கேட்டால் அதர்வா அப்பொழுது தான் கதாநாயகனாக நடிக்க போகும் நிலைமை இருந்ததால் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க சொன்னாராம் ஷோபா.மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் முரளியின் மனைவி மிகவும் நல்ல குணமுடையவர் என்றுதான் கூறவேண்டும் என கூறி வருகிறார்கள்.