ஆர்யா உடன் குத்து சண்டை போடா தயாராகும் அவரது மனைவி.! கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்.

arya and sayesha
arya and sayesha

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்கள் பின்னாட்களில் சூப்பர் ஹீரோவாக மாறுவது உண்டு. அப்படியே தமிழ் திரை உலகில் சத்யராஜ், ரஜினிகாந்த் வழியில் மாறி உள்ளவர்தான் நடிகர் ஆர்யா.

இவர் ஆரம்பத்தில் அண்ணன், வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த  இவர் பின்னாட்களில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தி தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துக்கொண்டார்.அதனை மேலும் தக்கவைத்துக்கொள்ள ஆர்யா  அவர்கள் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்த படங்களான நான் கடவுள், இரண்டாம் உலகம், ஆரம்பம், பட்டியல்,  வட்டாரம் போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் பெயரை பெற்றுத் தந்தன.இப்படி சிறப்பாக நடித்து வந்த இவர் சமீபத்தில் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்தப் படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடித்தவர் தான் சாயிஷா. அவர்கள்  இருவரும் அந்தப் படத்தின் போது காதல் வயப்பட்டனர். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு தற்போது சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக இருவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். போரடிக்காமல் இருக்க சாயிஷா தனது கணவர் ஆரியா அவர்களுக்கு விதவிதமாக சமைப்பது,  நடனமாடுவது,  பாட்டு பாடுவது,  ஜிம் ஒர்க்கவுட் செய்வது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அதுபோல ஆர்யா அவர்கள் தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதற்காக தனது உடம்பை கரடுமுரடாக ஏற்றி உள்ள வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது சமுகவளைதலத்தில் வெளியிட்டு வந்தார்.

மேலும் பிட்டாக வைத்துக் கொள்ள ஜிம் ஒர்க் அவட் ஆகியவற்றை செய்து வருகிறார். தற்பொழுது அவரது மனைவி சாயிஷாவும் தற்போது அவருடன் இணைந்து பார்ட்னராக சேர்த்துக் கொண்டார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அப்ப வீட்டில குத்துச்சண்டை நிறைய இருக்கும் போல என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.