பிரசாந்தை ஏமாற்றி திருமணம் செய்துக்கொண்ட அவரின் மனைவி.! ரசிகரின் மூலம் உண்மையை தெரிந்துக்கொண்ட குடும்பத்தினர்கள்.. விவாகரத்து பெற்று பிரிந்த சோகம்

prasanth 2

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாயாக ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகர் பிரசாத் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் தற்பொழுது அவர் குறித்த சில தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் பிரசாத் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வந்ததால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்து வந்தார்.

அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் வின்னர் இந்த திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் தோல்வியினை பெற்று வந்ததால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து மொத்தமாக விலகினார்.

இந்நிலையில் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் குண்டாக இருந்ததால் ரசிகர்கள் இவரை ஹீரோவாக ஏற்றுக் கொள்ளவில்லை மேலும் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவ்வாறு இவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது அவரது திருமண வாழ்க்கை தான்.

அதாவது நடிகர் பிரசாந்த் கடந்த 2005ஆம் ஆண்டு பிரபல எக்ஸ்போர்ட் தொழிலதிபரின் மகள் கிரகலட்சுமி என்ற பெண்ணை பெற்றோர் சமதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். திருமணமாகிய சில வருடங்கள் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். மேலும் பிரசாந்தை விட கிரகலட்சுமி வயது அதிகமானவர் எனவும் அவரை ஏமாற்றி தான் திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டதாகவும் பிறகு அவர் விவாகரத்து செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில் இதன் காரணத்தினால் பிரசாந்த் மன உளைச்சலுக்கு ஆளானார். இப்படிப்பட்ட நிலையில் பல பிரச்சனைகளுக்குப் பிறகு தற்பொழுது வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணைந்து பிரசாந்த் நடிக்க இருக்கிறார்.

எனவே இந்த திரைப்படத்தின் மூலம் இன்னும் சில திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பாலிவுட்டில் வெளியாகிய சூப்பர் ஹிட் பெற்ற திரைப்படம் தான் அந்தாதுன். இந்த படத்தில் தபு, ராதிகா ஆப்தே, ஆயுஷ்மான் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் காமெடி திரில்லர் படமாக உருவாகியிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படம் தமிழ் ரீமேக் உரிமையை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கி இருக்கும் நிலையில் சமீப பேட்டியில் இவர் இந்த படத்தின் தமிழில் ரீ மேக்ஸ் செய்ய பட இருப்பதாகவும் இதற்காக நடிகர் பிரசாந்த் இருபது கிலோ வரை குறைத்துள்ளதாகவும் தியாகராஜன் தெரிவித்துள்ளார் எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு களுக்காக வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட இருப்பதாக கூறினார்.

மேலும் இதனை அடுத்து பிரசாந்தின் முதல் திருமணம் கிரகலட்சுமி உடன் நடைபெற்றது. கிரகலட்சுமியின் குடும்பம் தெரிந்த குடும்பம் தான் அதனால் தான் பிரசாந்த் கிரகலட்சுமி இருவருக்கும் திருமணம் செய்து வைத்தோம். ஆனால் பிறகு தான் கிரகலட்சுமி வேறு ஒருவரை திருமணத்திற்கு முன்பு ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தது தெரியவந்தது மேலும் இந்த விஷயத்தை பிரசாந்தின் ரசிகர் ஒருவர் மூலம்தான் தெரிந்து கொண்டோம் அது மட்டுமல்லாமல் கிரகலட்சுமி திருமணமான ஒரு மாதத்திலேயே வீட்டை விட்டு சென்று விட்டார்.

prasanth 1
prasanth 1

பின் கிரகலட்சுமி குடும்பத்தினர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனார் அப்பொழுதுதான் பிரசாந்தின் ரசிகர் கிரகலட்சுமி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற புகைப்படத்தை ஆதாரத்துடன் கொடுத்தார். பிறகு அந்த வழக்கை முடிந்தது ஒருவேளை பிரசாந்த் காதல் திருமணம் செய்து கொண்டிருந்தால் நன்றாக இருந்து இருப்பாரோ? என்ற எண்ணம் வந்தது பிரசாந்த் இரண்டாவது திருமணம் விரைவில் செய்ய வேண்டும் அதுவே தந்தையின் தலையாய கடமை அது அரேஞ்ச் மேரேஜ் ஆகத்தான் இருக்கும் பிரசாந்த் படம் வெளியான அடுத்த மாதமே அவருக்கு கல்யாணம் தான் என கூறியுள்ளார்.