இந்திய கிரிக்கெட் அணியில் சமீபகாலமாக இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பல இளம் பேட்ஸ்மேன்கள் உருவாகியிருந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் வரவில்லை என்ற பேச்சு மட்டும் அதிகமாக இருந்து வந்த நிலையில் சமீபகாலமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தனது திறமையை நிரூபித்து தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து உள்ளவர்தான் முகமது சிராஜ்.
இவர் சமீபத்தில் அஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை மேலும் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதன்பிறகு இவரை சிறப்பாக கொண்டாட ஆரம்பித்தது இந்திய அணி. முகமது சிராஜ் தற்போது இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு இந்திய அணி இங்கிலாந்து அணியுடனான தொடரில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் மீண்டும் இங்கிலாந்து அணியின் சொந்த மண்ணில் அந்த அணியை தடுமாற சிறப்பாக பயிற்சி மைய கொண்டுள்ளதோடு தனது திறமையை வெளிக்காட்ட ரெடியாக இருக்கிறார். இந்த நிலையில் போட்டி ஒன்றில் பேசிய முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா தொடரின் போது நிறைய விடயங்களை கற்று கொண்டேன் ரஹானே தலைமையிலான அணியின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது அவர் என்னை எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார் இன்றுவரை அந்த ஆஸ்திரேலியா தொடரில் நினைத்துப் பார்க்கும்போது அந்த கோப்பையை கையில் ஏந்திய நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது அதே போன்று இங்கிலாந்திலும் தொடரை வென்று அந்த கோப்பையை கையில் ஏந்த ஆசைப்படுகிறேன்.
இப்பொழுது நான் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்படுகிறேன் நிச்சயம் இந்திய அணியால் இந்த இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது மேலும் தொடரில் இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மன் கேப்டன்னுமான ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்துவது என்னுடைய இலக்கு என அவர் கூறியிருந்தார்.