தொடர்ந்து பல ஆண்டு காலங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை திரிஷா இவர் மற்ற நடிகைகளை விட சினிமாவில் நீண்ட வருடங்களாக நிலைத்து நிற்கிறார். மேலும் வயதானாலும் கூட இவருடைய அழகு குறையாத காரணத்தினால் சமீப காலங்களாக தொடர்ந்து முக்கிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகை திரிஷா அரசியலில் நுழைகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக கோபமடைந்த த்ரிஷாவின் அம்மாவும் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது முன்னணி நடிகையான இவர் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு வயதான காரணத்தினால் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 90ஸ் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது ஹீரோயின் ஆக தொடர்ந்து நடித்து வந்த இவர் வில்லியாகவும் நடித்து பிரபலமடைந்தார். அந்த வகையில் தற்பொழுது நடிகை திரிஷா மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் நடிகை திரிஷாவிற்கு தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் அவர் தேசியக் கட்சியில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது மேலும் சினிமாவில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு குறைந்த காரணத்தினால் காங்கிரஸ் கட்சியில் இவர் இணைந்து செயல்பட இருக்குகிறார் என கூறப்பட்டு வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் இதனால் கோபமடைந்த த்ரிஷாவின் அம்மா இது முற்றிலும் வதந்தி என மிகவும் கோபமாக பதில் அளித்துள்ளார். மேலும் இது போன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை திரிஷா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார் விரைவில் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்புகள் வரும் என கூறி உள்ளார்.