சிலுக்கு சுமிதாவின் இறப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் கதறி அழுக அவருடைய அம்மா.! வைரலாகும் புகைப்படம்..

silk sumitha
silk sumitha

தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து புகழின் உச்சத்தில் இருந்து வந்தவர் தான் நடிகை சிலுக்கு சுமிதா.இவர் தன்னுடைய கவர்ச்சியான உடல் அமைப்பினால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் மேலும் காந்த கண்ணழகு,வசீகரமான உடலமைப்பு, குரல் என தனக்கென உரியதான பாணியில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் நடிகை சிலுக்கு சுமிதா.

இவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது இவர் 1970ஆம் ஆண்டு ஒப்பனை கலைஞராக சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு தமிழில் வெளிவந்த வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார் இந்த படத்தில் தான் சிலுக்கு என்ற சாராயம் இருக்கின்ற பெண்ணாக நடித்திருந்தார். இதன் காரணமாக இவருடைய பெயர் சிலுக்கு சுமிதா என அனைவராலும் கூறப்பட்டது.

சினிமாவில் 17 வருடங்களாக பயணம் செய்த இவர் ரஜினி, கமல், பிரபு என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மேலும் தமிழ்,தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தொடர்ந்து பல மொழிகளிலும் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இவருடைய கவர்ச்சி நடிப்பினாலும் நடனத் திறமையினாலும் பிரபலமடைந்த இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து பலரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

இவ்வாறு மிகவும் பிசியாக இருந்து வந்த இவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் அதன் பிறகு இவர்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டதால் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவுள்ளார். இவ்வாறு மனையில் இருந்து வந்த இவர் தற்கொலை செய்து கொண்டார் இது ரசிகர்கள்,திரை பிரபலங்கள் என அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

siluku sumitha
siluku sumitha

பிறகு தமிழ் சினிமாவில் சிலுக்கு சுமிதாவின் வாழ்க்கை கதையை படமாக எடுப்பதாக தகவல் வெளிவந்துள்ளது இப்படிப்பட்ட நிலையில் சிலுக்கு சுமிதா தற்பொழுது இல்லை என்றாலும் அவர்கள் பற்றிய தகவல்கள் நாள்தோறும் சோசியல் மீடியாவில் வைரலாவது வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் இவர் இறப்பதற்கு முன்பு தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் சிலுக்கு சுமிதா இறந்த பொழுது அவர் அம்மா கதறி அழுத்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.