நடிகர் விஜயின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இதுதான் – பிரபல காமெடி நடிகர் மதுரை முத்துக்காளை பேச்சு.!

vijay-
vijay-

தமிழ் சினிமா உலகில் பல்வேறு காமெடி நடிகர்கள் அந்தந்த காலகட்டத்தில் நடித்து அசத்தியுள்ளனர் அந்த வகையில் 90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரை பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்து உள்ளவர் முத்துகாளை. இவர் கவுண்டமணி செந்தில் வடிவேலு போன்ற நடிகர்களுடன் நடித்து உள்ளார்.

திறமையான நடிகனாக இருந்தாலும் அண்மைக்காலமாக பெரிய அளவு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகின்றன இருப்பினும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகள் கொடுத்து அசத்தி வருகிறார். அப்படி பேட்டி ஒன்றில் நடிகர் மதுரை முத்துக் காளை நடிகர் விஜய் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.

என்னவென்றால் விஜய் இப்பொழுது உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார் பல்வேறு புதிய படங்களில் நடித்தும் ஓடிக் கொண்டிருக்கிறார் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் இவர் தனது தந்தையின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவரது கடின உழைப்புதான் அவரை இந்த லெவலுக்கு எடுத்து வந்ததாக கூறினார் காமெடி நடிகர் மதுரை முத்துக் காளை.

மேலும் பேசிய அவர் தளபதி விஜய் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியானவராக இருப்பார் ஏன் அவர் இவ்வாறு இருக்கிறார் என பல தடவை யோசித்து இருக்கிறேன் ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது அவர் படத்தின் காட்சிகளை நன்கு உன்னிப்பாக கவனிப்பார். தனக்கு எந்த மாதிரியான காட்சிகள் வருகிறது.

என்பதை நன்கு கவனித்து அதை மனதிற்குள்ளேயே ரிகசல் செய்து பார்த்துக்கொள்கிறார் அதனால் தான் அவர் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருப்பார் என எனக்கு தோணுகிறது என அவர் கூறினார். காமெடி நடிகர் முத்துக்காளை பேசிய இந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தீயாய் பரவி வருகிறது.