bagupali prabhas video: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரபாஸ். இவர் 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் சக்ரம், பெளர்ணமி, யோகி, முன்னா, பில்லா, மிர்ச்சி, ரிபெல் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் 2015ம் ஆண்டு பாகுபலி என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அது மட்டுமல்லாமல் உலக அளவில் பாகுபலி படத்தின் மூலமாக ஃபேமஸ் அடைந்தார். யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நடித்திருந்தார். இப்படமும் மிகப்பெரிய வசூல் சாதனையாக அவருக்கு அமைந்தது. இதையடுத்து அவர் தெலுங்கு சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக உள்ளார்.
அதன் பிறகு புதுமுக இயக்குனரை வைத்து பெரிய பொருட்செலவில் சகோ படம் மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட்டது ஆனால் இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்பொழுது உலகையே உலுக்கி கொண்டிருக்கின்ற கொரோனா தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் அதனை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை விதிக்கப்பட்டுள்ளது தடையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
பிரபலங்கள் போர் அடிக்காமல் இருக்க விழிப்புணர்வு வீடியோ, சமைப்பது, படிப்பது என பலவற்றை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பிரபாஸ் அவர்கள் வீட்டில் வாலை கையில் வைத்து சுற்றி கொண்டு இருந்தார் எதோ செய்யப் போகிறாரோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென காய்கறிகளை நறுக்கி கொண்டிருந்தார்.பாகுபலிக்கு இந்த நிலைமையா என புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த வீடியோ பழையதாக இருந்தாலும் இந்த சூழ்நிலைக்கு கச்சிதமாக அமைந்துள்ளது என கூறிவருகின்றனர்.
பாகுபலிக்கே இந்த நிலைமையா??? pic.twitter.com/CargyLLwf0
— பீட்டர் மாமா? (@PEETER_MAMA) April 9, 2020