80 90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை ரோஜா. இவரின் நடிப்பு திறமையினாலும் கவர்ச்சியான கட்டுக்கோப்பான உடல் அமைப்பிளும் எளிதில் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.அந்த வகையில் இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் கிடைத்து வந்தது.
அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு கதாநாயகியாகவும், கவர்ச்சி நடிகையாகும் ஒட்டுமொத்த திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் கவர்ந்து பிரபலமடைந்தார்.இவர் செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முதலில் அறிமுகம் ஆகியுள்ளார். இவரின் முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்று அனைவரும் போட்டி போட்டு கொண்டு இவரை தங்களது படங்களில் நடிக்கவைக்க ஆசைப்பட்டு வந்தார்கள்.
அந்த வகையில் அனைவரின் படங்களிலும் நடித்து சினிமாவில் அசைக்க முடியாத ஓர் இடத்தை பெற்றார். பொதுவாக நடிகைகள் என்றால் தங்களது இளமை குறையும் வரை மட்டும் தான் அவர்களால் முன்னணி நடிகையாக நடிக்க முடியும் அதன் பிறகு குணசித்திர நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அந்த வகையில் ரோஜா குணசித்திர நடிகையாக நடிப்பதற்கு விருப்பம் இல்லாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகிய அரசியலில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இவர் ஒரு கட்சியை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் ரோஜா சில வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளரும் இயக்குனருமான ஆர்கே செல்வமணி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் முதல் பெண் குழந்தை மிகவும் பெரிய பெண்ணாக ஆனதால் அனைத்து தயாரிப்பாளர்களும் ரோஜாவின் மகளை தனது திரைப்படங்களில் நடிக்க வைப்பதற்காக ரோஜாவிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ரோஜாவிடம் உங்கள் மகள் உங்களை போலவே மிகவும் அழகாக இருக்கிறார் என்று ஐஸ் வைத்து வருகிறார்களாம்.
ஆனால் ரோஜா தற்போழுது அவர்களுக்கு திரைப்படங்களில் நடிப்பது வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். இந்நிலையில் ரோஜாவின் மூத்த மகளான அனுஷ் மல்லிகாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு எனது அம்மா நடிகை எனது அப்பா தயாரிப்பாளர் இயக்குனர் இவ்வாறு திரையுலகினர் சேர்ந்தவரின் மகனாக இருந்து கொண்டு நான் சினிமாவில் நடிக்க ஆசைப் படாமல் இருப்பேனா என்று கூறியுள்ளாராம்.
அந்த வகையில் இவருக்கு ஆசை இருக்கின்றது ஆனால் ரோஜா தான் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று கூறி வருகிறார்கள். ஆனால் விரைவில் கண்டிப்பாக ரோஜாவின் மகள் அனுஷ்கா மல்லிகா கதாநாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.