விஜய் டிவியில் பல்வேறு சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே சினிமா டைட்டில்களை தலைப்பாக வைத்து வெளியிடுவது வழக்கமான ஒரு செயல் தான் அந்த வகையில் விஜய் டிவியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் தான் ராஜா ராணி சீரியல்.
இவ்வாறு இந்த ராஜா ராணி சீரியல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் ஆலியா மானசா. பிரபலமான நமது நடிகை தன்னுடன் இந்த சீரியலில் இணைந்து நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
அப்போது திருமணத்திற்கு பிறகாக அவருக்கு ஐலா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும் சீரியலில் நடிப்பதற்கு மிக அதிக அளவு ஆர்வம் காட்டி வந்த ஆலியா மானசா தற்போது ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக ஆலியா மானசா தன்னுடைய குழந்தையுடன் மிக நெருக்கமாக புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் நிரம்பி வழிந்தது நாம் பார்த்திருப்போம்.
இந்நிலையில் அவருடைய மகளின் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் இது ஆலியா மானசா வின் முதல் மகளா என பலரும் ஆச்சரியத்தில் இருப்பது மட்டுமில்லாமல் இவ்வளவு நன்றாக வளர்ந்து விட்டார் என கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.