அருண்ராஜா காமராஜன் மனைவியைப் பற்றி உருக்கமான தகவலை பகிர்ந்த ஹிப்ஹாப் ஆதி.?

aathi

தற்பொழுது கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸால் மக்கள் படாத பாடு படுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் சினிமாவில் உள்ள பல பிரபலங்களுக்கும் இந்த கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு அதில் ஒரு சிலர் மரணமடைந்து விடுகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் இந்த வருடத்தில் மட்டுமே தமிழ் சினிமா உலகைச் சேர்ந்த பலரையும் ரசிகர்கள் இழந்து விட்டார்கள்.

சமீபத்தில் கூட அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஒரு பிரபலம் இந்த தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் அவரது இழப்பை தாங்க முடியாமல் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

அவர் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா உலகில் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா இந்த நோய் தொற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார் இவரது இழப்பு குறித்து சினிமாவில் உள்ள பல பிரபலங்களும் தங்களது வருத்தத்தை நேரில் சென்றோ அல்லது சமூக வலைதள பக்கங்களில் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இவரது இழப்பு குறித்து ஹிப்ஹாப் ஆதி ஒரு தகவலை கூறியதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது அதில் சிந்துஜா அருண்ராஜாவை நான் ஒரு தடவை விமான நிலையத்தில் பார்த்தேன் அங்கு அவர் தனது கணவனைப் பற்றி மிகவும் பெருமையாக பேசியது மட்டுமல்லாமல் அவர் இப்பொழுது இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

sindhuja
sindhuja

-என கூறியது மட்டுமல்லாமல் அருண் காமராஜ் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்ததாக இந்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.மேலும் இந்த தகவலை அறிந்த இவரது ரசிகர்கள் பலரும் இதேபோல் எவ்வளவு நாட்கள் தான் நம்மால் வாழ முடியும் என பல கேள்விகளை சமூக வலைதள பக்கங்களில் எழுப்பி வருகிறார்கள்.