தல அஜித்தின் வெற்றி தயாரிப்பாளருடன் கூட்டணி வைக்கும் ஹிப்ஹாப் ஆதி..! கண்டிப்பா படம் செம ஹிட்டு தான்..!

aathi-02
aathi-02

பிரபல இயக்குனர் ஏ ஆர் கே சரவன் இயக்க இருக்கும் பேண்டஸி கதை அம்சமுள்ள திரைப்படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே நமது இயக்குனர் நிக்கி கல்ராணி மற்றும் ஹிப்ஹாப் ஆதி ஆகிய இருவரையும் வைத்து மரகதநாணயம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்தார் பின் இத்திரைப்படமானது திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

இந்நிலையில் நமது இயக்குனர் இயக்கப் போகும் அடுத்த திரைப்படத்தில் புதிய அப்டேட் ஆனது இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி அவர்கள் தான் ஹீரோவாக நடிக்கப் போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

மேலும் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நடிகர் ஹிப்ஹாப் ஆதி அவர்கள் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகுமாரின் சபதம் அறிவு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் மூன்றாவது முறையாக இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக  யார் நடிக்கப் போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்களுக்கு இடையே இருந்து வந்த நிலையில் அதற்கான விடை கூடிய விரைவில் தெரிவிக்கப் போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

aathi-1
aathi-1