ஹிப்ஹாப் ஆதி இசைக்கலஞ்சனாக ‘வணக்கம் சென்னை’ படத்தில் ‘சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்’ பாடல் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். இவருக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடித்த முதல் திரைப்படம் மீசைய முறுக்கு இந்த திரைப்படத்தில் விவேக் ஹிப்ஹாப் ஆதி போன்ற பலர் நடித்துள்ளனர். இவருக்கு ஜோடியாக ஆத்மிகா அவர்கள் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆதிக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் மாபெரும் ஹிட் கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் பிறகு நான் சிரித்தாள், நட்பே துணை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஒரு சில திரைப்படங்களில் இசை அமைத்தும் உள்ளார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஹிப்ஹாப் ஆதி தற்போது நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் நடிப்பில் புதிதாக உருவாகிவரும் திரைப்படத்தை இயக்குனர் ஏஜெண்ட்டை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மோகன்லால் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் மறுத்து விட்ட காரணத்தினால் இப்போது நடிகர் மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு இசையமைக்க தமிழ் நடிகரான மற்றும் இசையமைப்பாளரான ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தனி ஒருவன் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் துருவுக்கு இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.