அஜித், மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா, தபு போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இப்படம் 2000 ம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம்.ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வைரமுத்து பாடல் வரிகளில் சுஜாதா எழுத்தில் படம் வெளியானது.
இப்படம் ஜோன் ஆஸ்டென் எழுதிய சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது திரைப்படத்தில் வரும் என்ன சொல்ல போகிறாய் என்ற பாடல் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் கவர்ந்த பாடலாக இன்றுவரை இருந்து வருகிறது இந்த பாடல் சங்கர் மகாதேவன் அவர்களுக்கு சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது.
இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான எஸ் கலைப்புலி தாணு அவர்கள் இருபது வருடங்களுக்கு முன்பாக மம்முட்டி ஐஸ்வர்யாராய் அஜித் போன்றவர்கள் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளாகினார் அத்தகைய புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
20 ஆண்டுகள் ஆனாலும், நினைவில் நீங்கா தருணங்கள்! @DirRajivMenon @arrahman @mammukka #ThalaAjith #AishwaryaRai #Tabu #Abass #20YearsOfKandukondainKandukondain #KandukondainKandukondain pic.twitter.com/VZ6Urh6Sq9
— Kalaippuli S Thanu (@theVcreations) May 5, 2020