விஜய் படம் என்றாலே இந்த தொலைக்காட்சி தான்.! எத்தனை முறை ஒளிபரப்பி உள்ளார்கள் பார்த்தீர்களா.! இதொ முழு லிஸ்ட்

vijay-tamil360newz
vijay-tamil360newz

vijay movie : கொரனோ தொற்று காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் சினிமா துறையும் முடங்கிக் கிடக்கிறது, இன்னும் திரையரங்குகள் திறக்காமல் மூடப்பட்டு இருக்கிறது அதனால் பல கோடி நஷ்டம் அடைந்துள்ளது திரை துறை. இந்த நிலையில் அரசு ஊரடங்கு தளர்வில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் திரையரங்கை திறக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது, அதனால் மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஏனென்றால் மாஸ்டர் திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி காத்துக்கொண்டிருக்கிறது. காலங்காலமாக தொலைக்காட்சிகளில் சீரியல்களை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி வருகிறார்கள், ஆனால் சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் புதிய படங்களை ஒளிபரப்பி போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள்.

அதிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அன்றே டிஆர்பி ரேட்டிங் அதிகரிக்கும், அதனால் பல தொலைக்காட்சிகள் முன்னணி நடிகர்களின் படத்தை வாங்குவதற்கு போட்டி போடுகிறார்கள், அந்த வகையில் பண்டிகை நாட்களில் மற்றும் வார இறுதியில் விஜய் திரைப்படத்தை ஒளிபரப்பி டிஆர்பி ஏற்றிக்கொள்கிறது பிரபல தொலைக்காட்சி.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை விஜய்  திரைப்படத்தை பலமுறை ஒளிபரப்பி ,உள்ளது பல தொலைக்காட்சி, ஆகஸ்ட் மாதத்தில் விஜயின் திரைப்படத்தை 200 முறை ஒளிபரப்பி உள்ளது பல தொலைகாட்சி ஆனால் செப்டம்பர் மாதத்தில் 230 ஆக உயர்ந்துள்ளது,

இதோ அதன் முழு விவரம்.

ஜெயா தொலைக்காட்சி 93, சன் தொலைக்காட்சி 69, விஜய் தொலைக்காட்சி 21, ஜீதமிழ் 12, கலைஞர் தொலைக்காட்சி 13, என விஜய் படத்தை பல தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்பி உள்ளார்கள்.