தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200 திரைப்படங்களுக்கு மேல் வெளியாகி வருகின்றன அதில் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறுகின்றனவா என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
ஏதோ ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வர்த்தக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன அதுவும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாகவும் முன்னணி நடிகரின் திரைப்படமும் தான் அந்த லிஸ்ட்டில் இடம் பிடித்துவிடுகிறது.
கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிய திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் 50 சதவீத திரையரங்க இருக்கைகளுடன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பயந்து கொண்டிருந்த சினிமா உலகிற்கே உண்மையான மார்க்கெட் நிலவரத்தை உணர்த்திய திரைப்படம் மாஸ்டர்.
ஏனென்றால் பல சினிமா பிரபலங்கள் படத்தை வெளியிட தயங்கினார்கள் ஆனால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட்டதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் சர்வசாதாரணமாக 200 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி கண்டது.
கடந்த மூன்று வருடங்களாக முன்னிலையில் இருந்த பாகுபலி 2 படத்தின் வசூலை பிகில் திரைப்படம் முறியடித்தது ஆனால் பாகுபலி படம் கொடுத்த பங்கு தொகையை பிகில் திரைப்படத்தால் முறியடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் பாகுபலி 2 திரைப்படத்தின் பங்கு தொகையை முறியடித்து தற்போது முதலிடத்தை தட்டி தூக்கியுள்ளது.
இந்த நிலையில் அதிக ஷேர் கொடுத்த பத்து தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
அதில் முதலிடத்தில் மாஸ்டர் திரைப்படம் 85.5 கோடி பெற்றுள்ளது. அதேபோல் இரண்டாவது இடத்தில் பிகில் திரைப்படம் 83 கோடி, மூன்றாவது இடத்தில் 78 கோடி பாகுபலி திரைப்படம். நான்காவது இடத்தில் 76 கோடி சர்க்கார் திரைப்படம். ஐந்தாவது இடத்தில் 72.5 கோடி மெர்சல் திரைப்படமும்.
ஆறாவது இடத்தில் 69.6 விசுவாசம் திரைப்படம். எந்திரன் 63 கோடி பெற்று ஏழாவது இடத்தை பிடித்தது. 8வது இடத்தில் 2.0 திரைப்படம் 53 கோடி பெற்றது. அதன் பிறகு 55 கோடி பெற்று ஒன்பதாவது இடத்தில் பேட்ட திரைப்படம் 51 கோடி பெற்று 10வது இடத்தில் தெறி திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.