செலிபிரிட்டிகள் பலரும் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது வழக்கம்.. குறிப்பாக டிரஸ், வாட்ச் என நாம் அணியக்கூடிய பொருள்களை அதிக விலைகளில் போடுவார்கள்.. அந்த வகையில் கையில் கட்டும் வாட்ச்சை மட்டுமே பல கோடி கொடுத்து அணிகிறார்கள். அப்படி அதிக விலையில் வாட்ச்சை பயன்படுத்தும் ஐந்து பிரபலங்கள் குறித்து தான் நாம் பார்ப்போம்..
1. சச்சின் டெண்டுல்கர் : இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் பிடித்தவர். மேலும் அதிக வருடம் கிரிக்கெட் விளையாண்ட வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்துள்ள இவர் தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தனது குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார். இந்த நிலையில் சச்சின் கையில் அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை மட்டுமே சுமார் 1.3 கோடி ஆகும்.
2. நயன்தாரா : தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் அண்மையில் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு தற்பொழுது சினிமா, குடும்பம் என சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் கையில் அணிந்திருக்கும் வாட்ச்சின் மதிப்பு சுமார் 1.2 கோடி என சொல்லப்படுகிறது.
3. ஏ ஆர் ரகுமான் : இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக பார்க்கப்படுபவர் இசை புயல் ஏ ஆர் ரகுமான் இவர் இப்பொழுது ஒரு படத்திற்கு குறைந்தது 5 கோடி 6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் இவருடைய வாட்சின் விலை 11,50,000 ஆகும்.
4. மோகன்லால் : மலையாள சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் மோகன்லால்.. இவர் பிற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வெற்றி கண்டு வருகிறார். இவர் அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை 6 லட்சம் என சொல்லப்படுகிறது.
5. விராட் கோலி : அண்டர் 19 -ன் கேப்டனாக விளையாண்டு பிறகு இந்திய அணியில் இடம் பிடித்தார் தொடர்ந்து ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் அணிந்திருக்கும் வாட்ச்சின் விலை மட்டும் 57 லட்சம் என சொல்லப்படுகிறது.