இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 சீசன் முடிந்த நிலையில் 16 வது சீசன் அடுத்த ஆண்டு தொடங்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பாக ஐபிஎல் மினி ஏலம் நடத்தப்படும் எனக்கு ஏற்கனவே சொன்ன நிலையில் இன்று கொச்சியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஐ பி எல் இருக்கும் 10 அணிகளும் தனக்கு தேவையான சிறந்த வீரர்களை காசு கொடுத்து வாங்கி வருகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சில அணிகள் அதிக விலை கொடுத்து ஒரு சில முக்கிய வீரர்களை தட்டி தூக்கி உள்ளது அந்த வகையில் சாம் கரணை பஞ்சாப் கிங் சாணி 18. 50 கோடி கொடுத்து வாங்கி உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு போன வீரர்.
இவர் தான் நம்பர் உன்னிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் பொல்லாட ஏற்கனவே கழட்டிவிட்டது அதனால் அவரது இடத்தை நிரப்ப சரியான ஆளை ஐபிஎல் ஏலத்தில் வாங்கியுள்ளது ஆம் ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டர் கேமரான் கிரீனை 17.50 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.
அடுத்ததாக அதிக விலைக்கு போனவர் என்றால் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கு விலை போய் உள்ளார் இவரை சிஎஸ்கே அணி அதிக கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. லக்னோ அணி நிக்கோலஸ் பூரணை 16 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.
இன்னமும் ஏலம் முடிந்த பாடு இல்லை இப்பொழுதும் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இன்னும் சில முக்கிய வீரர்கள் இந்த ஏலத்தில் அதிக தொகைக்குப் போக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.