Baakiyalakshmi : சின்னத்திரையில் சீரியல்களை கொடுப்பதில் சன் டிவி விஜய் டிவியும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர், தென்றல் வந்து என்னை தொடும், தமிழும் சரஸ்வதியும், ஈரமான ரோஜாவே போன்ற சீரியல்கள் பல எபிசோடுகளை கடந்து ஓடுவதால்..
மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து ஃபேவரட் சீரியலாக இருந்து வருகின்றன. இதேபோல் விஜய் டிவியில் தற்போது புதிதாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, மகாநதி, ஆகா கல்யாணம் போன்ற சீரியல்களும் நல்ல வரவேற்பை கண்டு வருகின்றன. இந்நிலையில் டிவி சீரியல்கள் மூலம் பல கதாநாயகிகள் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து அவர்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமும் உருவாகின்றன.
சீரியலில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து ரசிகர்களை கவரும் கதாநாயகிகள் சோசியல் மீடியாவிலும் மாடல் புகைப்படங்களை வெளியிட்டும் ரசிகர்களை கவர்கின்றனர். இப்படி சோசியல் மீடியாவில் பிரபலமாகி இதன் மூலமும் சில நடிகைகள் காசு சம்பாதிக்கின்றன.
மேலும் சீரியலிலும் இந்த கதாநாயகிகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில முக்கிய சீரியல் கதாநாயகிகள் ஒரு நாளைக்கு அவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து விவரம் வெளியாகி இருக்கிறது.
அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா ரூ. 15 ஆயிரம், பாக்கியலட்சுமி சுசித்ரா ரூ.12 ஆயிரம், பாரதி கண்ணம்மா வினுஷா ரூ. 8 ஆயிரம், தமிழும் சரஸ்வதியும் நக்ஷத்ரா ரூ. 10 ஆயிரம், பாக்கியலட்சுமி ரேஷ்மா ரூ. 7 ஆயிரம் வாங்குவதாக கூறப்படுகிறது