இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் தெரியுமா.? ரஜினியை முந்திய கமல்.. இடம்பெறாத அஜித்

rajini kamal
rajini kamal

பொதுவாக சினிமாவை பொருத்தவரை டாப் நடிகர்களாக இருந்து வரும் பலருக்கும் கோடிக்கணக்கில் சம்பளங்கள் வழங்கி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் எந்த நடிகர்களுக்கு மார்க்கெட் அதிகம் இருந்து வருகிறதோ, எந்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி வசூலை வாரிக் குவிக்கிறதோ அந்த நடிகர்களுக்கு அதிக அளவில் சம்பளம் தரப்பட்டு வருகிறது அப்படி இந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

தளபதி விஜய்: வாரிசு நடிகராக அறிமுகமான விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருப்பதாக பட குழுவினர்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு படத்தில் நடிப்பதற்காக விஜய் 100 கோடி வரை சம்பளம் பெற்று வருகிறார்.

அல்லு அர்ஜுன்: இவருடைய நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் புஷ்பா இந்த படத்தை உலகமே கொண்டாடிய நிலையில் இந்த படத்திற்கு பிறகு அல்லு அர்ஜுனின் மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது. மேலும் விரைவில் புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கும் நிலையில் ஒரு படத்தில் நடிப்பதற்காக இவர் 75 முதல் 100 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

ரஜினிகாந்த்: 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் நடிப்பில் சமீப காலங்களாக வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் தோல்வியினை சந்தித்து வரும் நிலையில் இதன் காரணமாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினி தன்னுடைய சம்பளத்தை 80 கோடியாக குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷாருக்கான்: பல சர்ச்சைகளுக்கு நடுவில் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்த திரைப்படம் பதான். இந்த படத்தினை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக 100 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளாராம்.

பிரபாஸ்: ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றினை கண்ட பிரபாஸ் மேலும் இரண்டாம் பாகம் பான் இந்திய படமாக வெளியான நிலையில் இவருடைய மார்க்கெட் உயர்ந்தது. இந்த படத்திற்கு பிறகு 100 கோடி முதல் 150 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.

கமலஹாசன்: தற்பொழுது இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்காக மட்டும் கமல் 150 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இவ்வாறு இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் கமலஹாசன் முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.