2024 இல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்..! இரண்டாவது இடத்தை பிடித்த சூப்பர் ஸ்டார்..

பாலிவுட் சினிமா மிகப்பெரிய பொழுது போக்காக இருந்து வருகிறது அதிலும் ஹிந்தி பேசும் பார்வையாளர்கள் மத்தியில் அவர்கள் தான் நாட்டின் மிகப்பெரிய நடிகர்கள் அதேபோல் பாலிவுட் நடிகர்கள் தான் அதிக சம்பளம் வாங்குபவர்களாக இருந்து வந்தார்கள்.

ஆனால் சமீப காலமாக பாலிவுட் வழக்கமான ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் தென்னிந்திய சினிமா நடிகர்களும் பெரிய அளவில் சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள்., தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய திரைப்படங்கள் இந்திய முழுவதும் பல பிரபலத்தை உருவாக்கியுள்ளன அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்திய பட்டியலின் படி தென்னிந்திய நடிகர்கள் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 நடிகர்களை இங்கே காணலாம்.

இதில் முதலிடத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இருக்கிறார் இவரை கிங் ஆப் பாலிவுட் என கூறுவார்கள் அந்த வகையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதலிடத்தில் இருக்கிறார் இவர் ஒரு படத்திற்கு 150 முதல் 250 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராகவும் சூப்பர் ஸ்டார் ஆகவும் வலம் வருகிறார் இவர் ஒரு திரைப்படத்திற்காக 115 முதல் 270 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் இவர்தான் இரண்டாவது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் இருக்கிறார்.

விஜய்: அதேபோல் நடிகர் விஜய் ஒரு திரைப்படத்திற்காக 130 முதல் 250 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம் இவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

நான்காவது இடத்தில் அமீர்கான் 100 முதல் 275 கோடி வரை ஒரு படத்திற்காக சம்பளமாக வாங்குகிறார். இவரை தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் பிரபாஸ் இருக்கிறார் இவரும் 100 முதல் 200 கோடி வரை சம்பளமாக ஒரு திரைப்படத்திற்கு வாங்கி வருகிறாராம்.

அதேபோல் ஆறாவது இடத்தில் நடிகர் அஜித்குமார் இருக்கிறார் இவர் ஒரு திரைப்படத்திற்காக 105 முதல் 165 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். ஏழாவது இடத்தில் சல்மான் கான் இவர் ஒரு திரைப்படத்திற்காக 100 முதல் 150 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார்.

எட்டாவது இடத்தில் கமலஹாசன் ஒரு திரைப்படத்திற்காக 100 முதல் 150 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். ஒன்பதாவது இடத்தில் அல்லு அர்ஜுன் 100 முதல் 125 கோடி வரை சம்பளமாக ஒரு திரைப்படத்திற்கு வாங்கி வருகிறார். கடைசியாக அக்ஷய குமார் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார் இவர் ஒரு திரைப்படத்திற்கு 60 முதல் 145 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம்.