தற்போதுள்ள சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் எவை எல்லாம் முதல் நாள் வசலை குவித்துள்ளது என்பதைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
அஜித்- வலிமை:- இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும் வலிமை திரைப்படம் முதல் நாள் முன்பதிவு மூலம் 36.17 கோடி வரை வசூல் செய்து முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.
விஜய் -பீஸ்ட் :- பொதுவாகவே விஜயின் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகம் என்றே சொல்லலாம் அந்த வகையில் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டு மொக்கையான பீஸ்ட் திரைப்படம் முதல் நாளில் மட்டும் 27.40 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பொன்னியின் செல்வன்:- இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் டைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் முதல் நாளிலேயே 27 கோடி வரை வசூல் செய்துள்ளது.
விக்ரம்:- இயக்குனர் ராகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் விக்ரம் இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படம் முன்பதிவின் மூலம் 20.61 கோடி வரை முதல் நாள் வசூல் செய்துள்ளது.
எதற்கும் துணிந்தவன்:- நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முன்பதிவு மூலம் 15. 21 கோடி வரை வசூல் செய்தது. இதனை அடுத்து தற்போது சூர்யா அவர்கள் வாடிவாசல் திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார்.
ஆர் ஆர் ஆர் :- இயக்குனர் ராஜமௌலியின் பிரம்மாண்ட திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்த திரைப்படம் தமிழகத்தில் முன்பதிவு மூலம் 12.73 கோடிகளை வசூல் செய்தது. அதனை தொடர்ந்து தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் 9. 52 கோடி வரை வசூல் செய்தது.
டான்:- சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் 9.47 கோடிகளை வசூலித்தது. இதனை அடுத்து கோப்ரா திரைப்படம் முதல் நாளில் 9.28 கோடி வரை வாசல் செய்து உள்ளது.
கே ஜி எஃப் 2 :- கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாகி முதல் நாளில் 8.24 கோடிகளை வசூல் செய்து இருந்தாலும் அடுத்தடுத்து நாட்களில் படம் பயங்கரமாக திரையரங்கில் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.