தமிழ் சினிமாவில் அதிக அளவு வசூல் செய்த திரைப்படங்கள்.

movies
movies

தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படங்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

2.0:- இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான 2.O திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மேலும் இந்த திரைப்படத்தை 3டி தொழில் நுட்ப்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர். மேலும் இந்த திரைப்படம்  850+cr வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

பிகில் :- இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் பிகில். இந்தத் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவினால் வெற்றி பெற்ற திரைப்படமாகும். மேலும் இந்த திரைப்படம் 300+cr வசூல் செய்துள்ளது.

எந்திரன் :- இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகிய திரைப்படம் எந்திரன் இந்த திரைப்படம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படைப்பாக உருவாகி பிரபலமானது. இந்த திரைப்படம்  290+cr வசூல் செய்துள்ளது.

கபாலி :- நீண்ட நாட்களுக்குப் பின்னர் ரஜினியின் அதிரடி நடிப்பில் வெளியான திரைப்படம் கபாலி இந்த திரைப்படம் 286+cr வசூல் செய்துள்ளது.

மெர்சல்:- இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் மெர்சல் இந்த திரைப்படம்  சர்வதேச விருதுகளை பெற்று தந்தது. இந்த திரைப்படம் 260+cr வசூல் செய்துள்ளது.

பேட்டை :- 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை படம் வெளியானது இந்த திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படம் 250+cr வரை வசூல் செய்துள்ளது.

சர்க்கார் :- தமிழக அரசியல் கட்சியின் செயல்களை விமர்சித்து இப்படம் வெளியானது இதனால் இந்த திரைப்படம் பெரும் அளவில் விமர்சிக்கப்பட்டு தமிழகத்தில் பேசப்பட்டு இந்த படம் பிரபலமானது. சர்க்கார் திரைப்படம் 230+cr வரை வசூல் செய்துள்ளது.

தர்பார்:- ரஜினி நடிப்பில் வெளியான அதிரடி திரைப்படம் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக பெரும் அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த திரைப்படம் 223+cr வரை வசூல் செய்துள்ளது.

காலா :- ரஜினி மற்றும் ரஞ்சித் கூட்டணியில் உருவான இரண்டாம் திரைப்படம் காலா. விமர்சனம் ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக 210 கோடி வரை வசூல் செய்துள்ளது.

விசுவாசம் :- நடிகர் அஜித்குமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விசுவாசம் இந்த திரைப்படம் குடும்ப பங்கான கதையை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த தேவைப்படும் தமிழ்நாட்டில் மட்டும் வெளியாகி 200 கோடி வசூல் செய்துள்ளது.

நேர்கொண்ட பார்வை :- ஹிந்தி படமாக வெளியாகி புகழ் பெற்ற திரைப்படமான பிங்க் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாக உருவாகிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த திரைப்படம் 181 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அசுரன்:- இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் அசுரன் இந்த திரைப்படம் வெளியாகி பல விருதுகளை வென்றுள்ளது இந்த திரைப்படம் 150 கோடி வரை வசூல் செய்துள்ளது.

விக்ரம்:- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான அதிரடி த்ரில்லர் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் பல திரைப்பட நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளியாகி மூன்று வாரங்களில் 355 கோடி வரை வசூல் செய்துள்ளது.