ஆண்டவருக்கே விபூதி அடிக்க பார்த்த பிரதிப் ரங்கநாதன்.. சைலண்டாக வேலை பார்த்த விக்னேஷ் சிவன்

Kamal
Kamal

Pradeep Ranganathan : தமிழ் சினிமாவில் வளர்ந்து வருபவர் பிரதீப் ரங்கநாதன். முதலில் ஜெயம் ரவி வைத்து கோமாளி என்னும் படத்தை எடுத்தார். ஜெயம் ரவியுடன் இணைந்து காஜல் அகர்வால், யோகி பாபு, கே எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர்.

படம் முழுக்க முழுக்க காமெடி, ஆக்சன், எமோஷனல், ரொமான்டிக் என அனைத்தும் கலந்து இருந்ததால் அனைத்து தரப்பட்ட மக்களையும் கவர்ந்து இழுத்து அதிக நாட்கள் ஓட்டி பெரிய ஹிட் அடித்தது. அதன் பிறகு உடனேயே பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை இயக்கி,  நடித்தார் இந்த படம் கோமாளி படத்தை விட பெரிய ஹிட் அடித்தது.  ஓட்டு மொத்தமாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

சண்டையை மூட்டி விட புதிய டாஸ்க்கை அறிமுகம் செய்த பிக் பாஸ்.. விசித்ராவுக்கு கிடைத்த எதிரி லட்டுகள்.! கடைசியில் அடித்த அதிர்ஷ்டம்..

பிரதீப் ரங்கந்தனின் வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் தற்போது 20 – த்திற்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் பிரதீப் ரங்கந்தனை நடிக்கவைக்கவும், இயக்கவும் ஆர்வம் காட்டி வருகிறது இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன கதை ரொம்ப பிடித்து போகவே பிரதிப் ரங்கநாதன் நடிக்க ஓகே சொல்லி இருக்கிறார்.

இந்த படத்தை முதலில் கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க ஓகே சொல்லியது ஆனால் விக்னேஷ் சிவன் படத்தின் பட்ஜெட் 60 கோடியாம்.. அதில் 10 கோடி விக்னேஷ் சிவனின் சம்பளமாகவும், பிரதிப் ரங்கநாதனுக்கு 20 கோடி சம்பளம் என சொல்லப்பட்டது இதை கேட்ட கமலஹாசனை ஒரு நிமிஷம் ஆடிப் போய்விட்டாராம்.

முதன்முறையாக டூ பிஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.! உங்க திருமுகத்தை ஒரு பக்கமா திருப்புங்கோ எனக் கூறிய நெட்டிசன்கள்..

அதுவும் ஒரு ஹிட் கொடுத்த பிரதிப் ரங்கநாதனுக்கு 20 கோடி சம்பளமா முடியாது என சொல்லிவிட்டாராம் இதனை அடுத்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்திடம் கதை சொல்லப்பட்டது அது பிடித்து போக விக்னேஷ் சிவனுக்கு 10 கோடி, பிரதீப் ரங்கநாதனுக்கு 20 கோடி சம்பளம் தர ஒத்துக் கொண்டுள்ளதாம்.