அதிக சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா நடிகைகள் முதல் மூன்று இடத்தில் யார் தெரியுமா.? இதோ டாப் 10 லிட்

actress
actress

சினிமாவில் நடிகர்கள்தான் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்று பார்த்தால் நடிகைகளும் அதிக சம்பளம் வாங்கி வருகிறார்கள் அந்த வகையில் யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் யார் யார் எந்த இடத்தை பிடித்துள்ளார்கள் என்பதை இங்கே காணலாம்.

 பிரியங்கா மோனகன்  இவர் 10வது இடத்தை பிடித்துள்ளார் இவர் டாக்டர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதனை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக 2 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை அடைந்தார். அது மட்டுமில்லாமல் மிக குறைந்த வயதிலேயே முன்னணி நடிகையான அந்தஸ்தை பெற்றுள்ளார் அதனால் இன்னும் பல ஆண்டுகள் இவர் முன்னணி நடிகையாக வலம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.  50 லட்சம் வரை சம்பளம் வாங்குகிறார் அதனால் 10 வது இடத்தை பிடித்துள்ளார்.

அடுத்ததாக நாம் பார்க்கப்போவது ஆண்ட்ரியா நடிகை ஆண்ட்ரியா பாடகியாக வலம் வந்தவர் நடிகையாக நடிக்க ஆரம்பித்தார் அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருபவர். அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் கதாபாத்திரத்தில் தான் மட்டுமே நடிக்கு முடியும் என்பதுபோல்  கதாபாத்திரம் அமைந்து வருகிறது. மேலும் இவர் ஒன்பதாவது  இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் 75 லட்சம் சம்பளமாக பெறுகிறார் அதேபோல் ஒன்பதாவது இடத்தில் மேலும் ஒரு நடிகை இருக்கிறார் அவர்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலகட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் போகப் போக பல முக்கிய கதாபாத்திரத்திலும் நடிகையாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார் இந்த நிலையில் 75 லட்சம் சம்பளமாக பெற்று ஒன்பதாவது இடத்தை தக்க வைத்துள்ளார்.

அதேபோல் ஒன்பதாவது இடத்தில் மேலும் ஒரு நடிகை இடம்பிடித்துள்ளார் அவர்தான் சாய் பல்லவி இவரும் 75 லட்சம் சம்பளமாக பெற்று ஒன்பதாவது இடத்தை பெற்றுள்ளார். இப்படி மூன்று நடிகைகள் ஒன்பதாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அந்த வகையில் நடிகை திரிஷா முன்னணி நடிகையாக வலம் வருபவர் இவர் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகையாக வலம்வரும் திரிஷா எட்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவர் சம்பளமாக 80 லட்சம் வரை  வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழாவது இடத்தில் இரண்டு நடிகைகள்  இடம் பெற்றுள்ளார்கள். கமலஹாசனின் மகள் சுருதிஹாசன் சூர்யாவின் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் இவர் ஒரு கோடி வரை சம்பளமாக பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் ஏழாவது இடத்தில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக பெற்று காஜல் அகர்வாலும் இடம்பிடித்துள்ளார். தற்பொழுது காஜல் அகர்வால்  குழந்தை பெற்றுள்ள நிலையில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறான்.

நடிகை ராகுல் பிரீத் சிங் 1.25 கோடி சம்பளமாக பெற்று 6-வது இடத்தை தக்க வைத்துள்ளார் இவர் தீரன்  திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவுடன் என்ஜிகே திரைப்படத்திலும் நடித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் 1.5 கோடி சம்பளத்துடன் இருக்கிறார் ஜோதிகா இவர் சூர்யாவின் மனைவி ஆவார் திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்து வந்தார் ஆனால் தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.

அதேபோல் நான்காவது இடத்தில் நடிகை தமன்னா 1.75 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று இடம் பெற்றுள்ளார். இவர் விஜய் அஜித் சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவருக்கு உடல் எடை அதிகரிப்பதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது ஆனாலும் இன்னும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் இடம் பிடித்துள்ளார் இவருக்கு சம்பளமாக 2 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இவர் விஜயுடன் தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் நடித்ததன் மூலம் சம்பளம் அதிகரித்தது.

அதேபோல் இரண்டாவது இடத்தில் நடிகை சமந்தா மூன்றிலிருந்து ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்று வருகிறார் இவர் திருமணத்திற்குப் பிறகு பட வாய்ப்புகள் குறையும் என எதிர்பார்த்த நிலையில் திருமணத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவர்களை தொடர்ந்து முதலிடத்தில் வழக்கம் போல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற நயன்தாரா இடம் பிடித்துள்ளார் இவர் சம்பளமாக 6 முதல் 10 கோடி ரூபாய் பெற்று வருகிறார் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வருகிறார்.