தியேட்டரில் 100 சதவிகித இருக்கைகளையும் பயன்படுத்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! பட்டாசு வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்..!

theater-2

கடந்த இரண்டு வருடங்களாக வைரஸ் தொற்று காரணமாக தியேட்டர் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது இந்நிலையில் சமீபத்தில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடித்ததன் பிறகாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி வழங்கினார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் 100 சதவீத பார்வையாளர்களும் தியேட்டரில் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஒரு புதிய உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக் காரணமாக சமீபத்தில்தான் திரையரங்கங்கள் திறக்கப்பட்டன.

முதலில் 50 சதவீத பார்வையாளர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 சதவீத பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் இவ்வாறு தியேட்டரில் 100 சதவீத பார்வையாளர் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சமூக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஏனெனில் நூறு சதவிகித இருக்கைக்கு  அனுமதி கொடுத்தால் கண்டிப்பாக தொற்று வைரஸானது அதிகரிக்கும் ஆகையால் அதில் எந்த மாற்றமும் கிடையாது ஆகவே தியேட்டரை மூட வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் 100 சதவீத இருக்கைகள் பயன்படுத்த தியேட்டரில் தாமதிக்க பட்ட நிலையில் அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு  சென்னை உயர்நீதிமன்றம் ஆனது திரையரங்கில் 100 சதவீத இடுகைகளையும் பயன்படுத்தலாம் என தீர்ப்பளித்துள்ளது.

ஏற்கனவே தியேட்டர்கள் மூடியதன் காரணமாக பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள் வெளி வராமல் கிடப்பில் இருந்து வருகிறது. அந்தவகையில் தற்போது தான் முன்னணி நடிகர்கள் தங்களுடைய திரைப்படத்தை வெளியிடுவதன் காரணமாக தியேட்டரில் ரசிகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.

theater-1
theater-1

இந்நிலையில் மறுபடியும் தியேட்டரில் மூடினாள்  தியேட்டர் உரிமையாளர்களின் நிலைமை மற்றும் சினிமா பிரபலங்களின் நிலைமை ஆகிய அனைத்தையும் நினைத்துப் பார்க்க வேண்டும். இது ஒரு பக்கம் இருந்தால் தோற்று அதிகமானால் நம் மக்களுக்கு  மட்டுமின்றி நம் அனைவருக்கும் பாதிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.