இயக்குனர் மணிரத்தினம் கல்கி என்னும் நாவலை தழுவி பொன்னியன் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் அதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் பல முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளதால் அதற்காக பல நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் அந்த வகையில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகிய நிலையில் படத்தை பார்க்க பலரும் ஆவலாக இருந்து வருகின்றனர்.
இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவதற்கு முன்பே படத்திற்கான சிக்கல் ஆரம்பம் ஆகி உள்ளது. அப்படி சென்னையை சேர்ந்த செல்வம் என்ற ஒரு நபர் பொன்னியன் செல்வன் பட குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளது படத்தில் பல வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அவர் பொன்னியின் செல்வன் படத்தை எதிர்க்கவில்லை ஆனால் வரலாற்று உண்மைகள் சில மறைக்கப்பட்டு மாறுதலாக இந்த படம் உருவாகியுள்ளதாக குற்றச்சாட்டு வைக்கிறார்.
அவர் கூறுவது சோழர்கள் நாமும் இடம் பழக்கம் இல்லை ஆனால் பொன்னியன் செல்வன் படத்தின் போஸ்டரில் விக்ரம் நெற்றியில் நாமம் இருந்தது. இதுபோல படத்தில் பல வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கலாம் என அவருக்கு சந்தேகம் எழும்பி படத்தை வெளியிடுவதற்கு முன்பு தங்களுக்கு போட்டு காட்டுங்கள் என கேட்டுள்ளார்.