சமீபத்தில் வெளியான படங்களில் மக்களுக்கு ரொம்ப பிடித்த திரைப்படம் எது தெரியுமா.? லிஸ்ட்டில் இருக்கும் விக்ரம், KGF 2, RRR.

movies
movies

தென்னிந்திய திரை உலகில் அண்மை காலமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று எதிர்பார்க்காத வசுலை அள்ளி சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு வெளியாகி அதிக வசூலை அள்ளிய திரைப்படமாக பார்க்கப்படுவது RRR.

இந்த படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரகனி மற்றும் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினர். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக இருந்ததால் மக்கள் இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

அதன் காரணமாகவே இவ்வளவு வசூல் அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து கே ஜி எஃப் 2 திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தது அதனைத் தொடர்ந்து விக்ரம், புஷ்பா 2 போன்ற படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் உலகில் மிகப் பிரபலமான IMDP தளம் 2022 அரையாண்டில் மக்கள் மற்றும் ரசிகர்களின் பிரபலமான திரைப்படம் எது என்பது குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

NO.1 இடத்தில் விக்ரம் திரைப்படம், இரண்டாவது இடத்தில் கே ஜி எஃப் 2 நான்காவது இடத்தில் RRR போன்ற படங்கள் இடம் பிடித்தன. RRR,  கே ஜி எஃப் 2 போன்ற படங்கள் நல்ல வசூலை அள்ளினாலும் மக்களை கவர்ந்த படமாக விக்ரம் தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடப்பட்டது.