2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் சாய்பல்லவி.
இவர் நடித்த முதல் படத்திலேயே அசுர வளர்ச்சியை எட்டி உள்ளதால் தொடர்ந்து அடுத்தடுத்த சூப்பர் ஹிட் திரைப்படங்கள் அவரைத்தேடி வந்தன அதைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சாய்பல்லவி. இவர் தெலுங்கிலும் நல்ல கதைகளம் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.
மேலும் தமிழில் முதன்முறையாக தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த தமிழ் ரசிகர்கள் மனதில் குடி பெயர்ந்தார். இந்த படத்தில் தனுஷ் மற்றும் சாய்பல்லவி இருவரும் இணைந்து ரவுடி பேபி என்ற பாடலுக்கு நடனம் ஆடியது ரசிகர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
சாய் பல்லவி அந்த படத்தை தொடர்ந்து சூர்யாவுடன் என் ஜி கே போன்ற இரு படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிதாக உருவாகவுள்ள ஒரு திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார் இந்த திரைப்படத்தினை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய சாய்பல்லவி எனது முதல் க்ரஷ் சூர்யாதான் என்று கூறியுள்ளார் மேலும் எனக்கு சின்ன வயசிலிருந்தே சூர்யாவை ரொம்ப பிடிக்கும் என்றும் கூறியுள்ளார் இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன.