மறைந்த முரளி திரைப்படத்தில் நடித்த ஹீரா இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா.!

idhayam
idhayam

Actress Heera Rajagopal: சினிமாவைப் பொறுத்தவரை நடிகர், நடிகைகள் மீது ஏராளமான கிசுகிசுப்புகள் எழுவது வழக்கம் அப்படி இந்த கிசுகிசுப்பினால் தன்னுடைய மார்க்கெட்டை இழந்து இருப்பவர்தான் நடிகை ஹீரா. 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹீரா 1991ஆம் ஆண்டு வெளியான இதயம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இவருடைய முதல் திரைப்படமே மிகப்பெரிய ரீச்சினை பெற்று தந்தது எனவே நல்ல பெயரை பெற்ற இவர் அமைதியான முகம், கட்டுக்கோப்பான உடல் அமைப்பு போன்றவற்றில் ஒற்றை ரோஜாவுடன் இதயம்  படத்தில் அழகாக தெரிந்தார். இவ்வாறு தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வந்த ஹீரா கமல், அஜித், சரத்குமார், கார்த்திக் என பல முன்னணி நடிகர்களுடனும் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

அப்படி கடைசியாக இவருடைய நடிப்பில் சுயம்வரம் படம் வெளியானது அதன் பிறகு தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் 2006ஆம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். ஹீரோ அஜித்துடன் காதல் கோட்டை படத்தில் இணைந்து நடிக்கும் பொழுது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து தசரதன் படத்தில் சரத்குமார் உடன் நடிக்கும் பொழுதும் இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. இப்படி அடிக்கடி காதல் வதந்திகளில் நடிகை ஹீரா சிக்கி வந்தார். தற்பொழுது அமெரிக்காவில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கியதில் பெண்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் போன்றவர்களின் கல்வி செலவுக்காக தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் பிஎஸ்சி சைக்காலஜி படித்திருக்கும் ஹீரா பல புத்தகங்களை எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது. ஹீரா பெரிதாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக ஆக்டிவாக இல்லை இவ்வாறு ஹீரா கிசுகிசுப்புகளில் சிக்காமல் இருந்தால் கண்டிப்பாக பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றிருந்திருப்பார்.