சினிமா உலகில் நடிகைகள் தான் அழகாக இருக்க ஆபரேஷன் செய்து கொள்வார்கள் ஆனால் நடிகர்களும் தன்னை அழகாக வைத்துக் கொள்ள ஆபரேஷன் செய்து உள்ளனர் அவர்கள் யார் யார் என்பது குறித்து தற்போது நாம் வியாபாரியாக பார்க்க இருக்கிறோம்.
அதிலும் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் ஆபரேஷன் செய்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. ரஜினி : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா ஆரம்பத்தில் ஸ்டைலாக புகை பிடிப்பது வழக்கம் அப்படி அவர் பன்னி பன்னி அவரது உதடு ரொம்ப கருப்பாக மாறியது. இதனால் தனது உதடு மாற்ற அவர் அறுவை சிகிச்சை செய்துள்ளார் என கூறப்படுகிறது.
சத்யராஜ் : இவர் சினிமா உலகில் ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் இவர் வில்லனாக நடித்தாலும் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் இவரது பற்கள் ரொம்ப நீளமாக இருந்ததால் அதை பார்த்து வாய்ப்புகள் கூட சில தவறி போய் உள்ளது. இதனால் பற்களை அவர் சரி செய்தாராம் இதனை மேடையிலேயே அவர் ஓப்பனாக தெரிவித்தார்.
துல்கர் சல்மான் :மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் சிறந்த படங்களை கொடுத்து தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை அங்கு வைத்துள்ளார் இவர் சினிமா ஆரம்பத்தில் நடிக்கும் போது அவரது மூக்கு பெரிதாக இருந்தது பின் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
கமல் : இவர் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருகிறார். இப்பொழுது 60 வயதுக்கு மேல் ஆனாலும் ஆள் பார்ப்பதற்கு இளமையாகவும் கம்பீரமாகவும் தெரிகிறார் அதற்கு காரணம் அவர் முகத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அழகாக இருக்க பேஸ் லிப்ட் என்ற சிகிச்சை செய்து உள்ளாராம் மேலும் சுருக்கங்கள் வராமல் இருக்க ஆன்டி ரிங்கில் என்ற சிகிச்சையும் கமல் செய்துள்ளாராம்.