அந்த காலத்தில் இருந்து தற்போது வரை வாரிசு நடிகர்நடிகைகளின் ஆதிக்கம் தான் சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது. அந்தவகையில் அப்பொழுதே சினிமாவிற்கு வாரிசு நடிகராக அறிமுகமானவர் தான் நடிகர் கார்த்திக்.
இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் எளிதில் சினிமாவில் பிரபலமடைந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதன் மூலம் இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளமும் உருவானது. அதிலும் முக்கியமாக இவரின் எதார்த்த நடிப்பு திறமையினால் பெண் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் தான். அதுவும் முக்கியமாக சுந்தர் சி மற்றும் கார்த்தி கூட்டணியில் வெளிவரும் அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றியை பெற்று விடும்.
இவரின் சிறந்த நடிப்பின் மூலம் நவரச நாயகன் என்று அனைவராலும் போற்றப்பட்டார். ஏனென்றால் இவர் ஹீரோ,நடிகர் காமெடி, வில்லன் என்று எந்தக் கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதனை முழுமையாக உள்வாங்கி நடிக்கும் திறமை உடையவர்.
இவருக்கு இடையில் படவாய்ப்புகள் குறைந்ததால் அரசியலில் ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார். அந்தவகையில் கட்சி ஒன்றை ஆரம்பித்தார். பிறகு தற்போது சட்டமன்ற தேர்தலுக்காக அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் எனவே இவரும் பிரச்சாரம் செய்து வந்தார்.
நடிகர் கார்த்திக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் போன்ற பல உடல்நலக் கோளாறுகள் இருந்ததால் மருத்துவர்கள் பிரச்சாரங்கள் போன்ற கடுமையான செயல்கள் எதுவும் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்கள். ஆனால் கார்த்திக் அதையெல்லாம் கேட்காமல் தற்போது கட்சிக்காக பிரச்சாரம் செய்ததால் மூச்சுத் திணறல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகமாக பாதிப்படைந்த விட்டது.
எனவே கார்த்திக் தொடர்ந்து பல நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மேலும் தற்பொழுது மிகவும் அதிகமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இந்நிலையில் கார்த்திக் குடும்பத்தினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்து உள்ளார்கள். நடிகர் கார்த்திக் விரைவில் உடல் நலம் சரியாகி குணமடைந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்ப்போம்.