சினிமா உலகில் நடிக்க வரும் புதுமுக நடிகைகள் பலரும் மாடலிங் துறையில் ஒரு ரவுண்ட் வந்த பிறகு தான் சினிமா துறையிலேயே காலடி எடுத்து வைக்கின்றனர். அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து பின் மலையாள சினிமாவில் நடித்து அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி நடித்து வருபவர் மாளவிகா மோகனன்.
தமிழில் முதலில் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து தளபதி விஜயுடன் முதல் முறையாக கைகோர்த்து மாஸ்டர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து பட்டையை கிளப்பினார் அந்த படம் சூப்பர் ஹிட் அடித்த..
நிலையில் அடுத்த டாப் ஹீரோ தனுஷுடன் கைகோர்த்த மாறன் திரைபடத்தில் நடித்தார் இந்த படம் OTT தளத்தில் வெளியாகி படுதோல்வியடைந்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வந்த மாளவிகா மோகனன் திடீரென பாலிவுட் பக்கம் தனது திசைதிருப்பி நடித்து வருகிறார்.
சினிமா உலகில் தொடர்ந்து நடிக்க வந்த மாளவிகா மோகனன் ஃப்ரீயாக இருக்கின்ற நேரங்களில் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பது வழக்கமாக வைத்துள்ளார் மேலும் ரசிகர்களுடன் உரையாடுவதும் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
இப்படி இருந்து வந்த நிலையில் அண்மையில் நீங்கள் சல்மான்கானுடன் நடிக்கிறீர்களா என பலர் கேட்டு வந்தனர் அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன். சல்மான்கானுடன் நான் நடிக்கவில்லை அது முற்றிலும் பொய்யான தகவல் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.