ஹாரர் திரில்லரில் மிரட்டும் நயன்தாராவின் புது பட டிரைலர் இதோ.!

nayanthara
nayanthara

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா கடந்த மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்ட ஆறே மாதத்தில் இரட்டை ஆண் குழந்தைக்கு பெற்றோர்கள் என்று அறிவித்திருந்தார்கள்.

இவர்களுடைய இந்த அறிவிப்பு பெரும் பூதாரமாக வெடித்தது. இதனால் பல சர்ச்சைகளில் சிக்கிய நயன்தாரா சினிமாவில் நடிக்க போவதில்லை என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் திருமணத்திற்கு பின்பு நடிகை நயன்தாரா பல திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா அவர்கள் நடித்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா தற்போது அஸ்வின் சரவணன் இயக்கத்தில் ஒரு ஹாரர் திரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் கனெக்ட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. இந்தத் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் இன்று நள்ளிரவில் 12:00 மணிக்கு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 22 தேதி வெளியாகும் இந்த திரைப்படத்தின் டைலர் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் வினை ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இதை தொடர்ந்து  இந்தத் திரைப்படம் லாக் டவுனுக்கு பிறகு தங்களுடைய சாதாரண வாழ்க்கைக்கு திரும்பும் மகளின் நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சியாகிறார் நடிகை நயன்தாரா. அது மட்டுமல்லாமல் தன்னுடைய மகளை அந்த நடவடிக்கையிலிருந்து எப்படி காப்பாற்றுகிறார் என்பது இந்த படத்தின் கதை.

இதோ நடிகை நயன்தாராவின் புதுபட டிரைலர்…