மீடியா உலகில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடர்ந்து பின்னாட்களில் ஹீரோயினாக ஒருமாதிரி உள்ளவர் லாஸ்லியா இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடர்ந்தார் இதனைத் தொடர்ந்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட லாஸ்லியா பின்னாட்களில் உலகம் அறியும் நபராக மாற பட்டார் லாஸ்லியா.
பிக் பாஸ் சீசன் இல் மற்ற போட்டியாளர்களை போலவே இவரும் கலந்து கொண்டு தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி வெகு நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார் இடையில் பிக்பாஸ் வீட்டில் கவினும் லாஸ்லியா இருவரும் காதலித்து பிரிந்தனர். இத்தகைய செயல் மூலம் விஜய் தொலைக்காட்சி தனது டிஆர்பி ரேட்டை ஏற்றுக்கொண்டது போல கவினும் லாஸ்லியாவின் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த கவீனுக்கு படவாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் தற்போது அவர் லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அதேபோல லாஸ்லியா அவர்களும் தற்பொழுது அர்ஜுனன்,ஹர்பஜன் சிங்,சதீஷ் ஆகியோருடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளிவந்துள்ளது இதில் ஹர்பஜன் சிங், லாஸ்லியா, சதீஷ் போன்றவர்கள் அடங்கிய போஸ்டர் வந்துள்ளது தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.