சுனைனாவின் ‘ரெஜினா’ படம் எப்படி இருக்கிறது.. ட்விட்டர் விமர்சனம் இதோ

rejina
rejina

தற்போது எல்லாம் ஹீரோக்களின் படங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறதோ அதேபோல் ஹீரோயின்கள் படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது தமிழ் சினிமாவின் பாப்புலர் நடிகையான சுனைனா நடிப்பில் ரெஜினா என்ற புதிய திரைப்படம் நேற்று வெளியாகி உள்ளது.

திரையரங்குகளில் மிகவும் பிரமாண்டமாக வெளியான இந்த படத்தினை இயக்குனர் டோமின் டிசில்வா இயக்கியிருக்கும் நிலையில் இதில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நிவாஸ் ஆதித்தன், ரித்து மந்தரா, ஆனந்த் நாக், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சதீஷ் நாயர் இசையமைத்திருக்கும் நிலையில் அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான எல்லோ பார் ப்ரொடக்ஷன் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

ஆக்ஷன், ரொமான்ஸ் என சுனைனா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்திற்கு பவிக்கு பவன் ஒலிப்பதிவு செய்த நிலையில் பவி.கே.பவன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் தொடர்ந்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த படம் முழுக்க முழுக்க பெண்கள் போல்டாக இருக்க வேண்டும் எனவும் அவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பதனையும் ஒரு பெண் தைரியமாக எவ்வளவு பிரச்சனைகளை சந்திப்பார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பது பலரும் இந்த படம் நன்றாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.