நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவர் ஒவ்வொரு படத்திலும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது உடல் பாவனையை மாற்றிக் கொண்டு சிறப்பாக நடிக்க கூடியவர் அப்படி அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை தழுவின.
அதனால் ஹிட் படங்களை கொடுக்க சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார். அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதைத் தொடர்ந்து விக்ரம் கையில் கோப்ரா என்ற திரைப்படம் உள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளிவரும் பட்சத்தில் விக்ரம் கேரியரில் ஒரு சிறந்த படமாக இருக்கும். இந்த நிலையில் கோப்ரா படத்தில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார் அந்த செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.
ஆம் காமெடி நடிகர் மதுரை முத்துவை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு காமெடியில் பின்னிப் பெடல் எடுக்க கூடியவர். இவர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆக இருந்தார் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் காமெடி செய்து மக்களை என்டர்டெயின்மென்ட் செய்தார்.
தற்போது விஜய் டிவியில் ராஜு வீட்ல பார்ட்டி மற்றும் ஒரு சில நிகழ்ச்சிகளில் வந்து செல்கிறார். இந்த நிலையில் அண்மையில் கோப்ரா படத்தின் டிரைலர் வெளிவந்தது அதில் மதுரை முத்து ஒரு காட்சியில் இடம் பெற்றுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.