தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகரின் படங்கள் வெகு நாட்கள் காத்திருந்து திரையரங்கில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவார்கள் ஆனால் அந்த திரைப்படங்கள் கூட மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றால் கேள்விக்குறி தான் ஆனால் குறைந்த பட்ஜெட் படங்கள் சைலண்டாக வெளிவந்து மக்களின் ஆதரவை பெற்று நிலைத்து நிற்பதால் கூட்டம் கூட்டமாக படத்தை பார்க்கின்றனர்.
அந்த வகையில் மோகன் ஜி இயக்கியுள்ள சமீபகால திரைப்படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அந்த வகையில் திரௌபதி திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரிச்சர்ட் ரிஷி உடன் முறையாக கைகோர்த்து ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை எடுத்தார்.
இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய ஒரு பாராட்டைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாஸ் காட்டி வருகிறது. இடத்தில் ரிச்சர்ட் ரிஷியின் நடிப்பு சிறப்பாக இருந்தது மேலும் நடிகர் தர்ஷா குப்தா, மானோ பாலா, தம்பி ராமையா, கௌதம்மேனன் போன்றவர்களின் நடிப்பும் சொல்லிக்கொள்ளும்படி ஓகேவா தான் இருந்துள்ளது.
இந்த படம் முதல் மூன்று நாட்களுக்கு மட்டுமே சுமார் 7 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்திய நிலையில் வார இறுதியில் இந்த திரைப்படம் நல்லதொரு வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
அப்படி பார்க்கையில் இந்த திரைப்படம் சரியாக எவ்வளவு வசூலித்தது என்றும் நம்மால் சொல்ல முடியவில்லை ஆனால் குறைந்த வசூலையே கடந்த இரண்டு நாட்களாக செய்தாக தகவல்கள் மட்டும் கசிகின்றன. எப்படியும் ருத்ர தாண்டவம் படம் 10 கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவிற்கு உண்மையை என தெரியவில்லை.