தமிழ் சின்னத்திரையில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் எண்டர்டெயின்மென்ட்டாக இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இப்படிப்பட்ட நிலையில் வாரம்தோறும் இந்நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் வெளியேறி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இந்த வாரம் 6 பேர் நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ள நிலையில் யார் இந்த வோட்டிங் லிஸ்டில் தற்பொழுது முதல் இடத்தை பிடித்துள்ளார் எனவும் கடைசி இடத்தை யார் பிடித்திருக்கிறார் என்பதை பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த வாரம் ராம் மற்றும் ஆயிஷா என இருவரும் எவிக்ஷன் செய்து வெளியேறினார்கள்.
எனவே இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களை மத்தியில் இருந்து வருகிறது அந்த வகையில் இந்த வாரம் நாமினேசன் லிஸ்டில் ஜனனி, ஏடிகே, மணிகண்டா, அசீம், விக்ரமன், ரக்ஷிதா உள்ளிட்டவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரையிலும் ஏராளமான கலவரங்களுக்கு காரணமானவர் தான் அசீம்.
இவர் தான் இந்த சீசனுக்கு தொடர்ந்து கண்டன்ட் கொடுத்து வருகிறார். மேலும் ரசிகர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல சப்போர்ட் இருந்து வரும் நிலையில் அவருக்கு ஓட்டுகளை வாரி வழங்கி உள்ளனர் எனவே இந்த ஆறு பேரில் அசிமுக்கு தான் அதிக ஓட்டுகள் கிடைத்து முதல் இடத்தில் உள்ளார்.
இவரை அடுத்து அமைதியாக நியாயம் பேசிக் கொண்டிருக்கும் நபரான விக்ரமனுக்கு இரண்டாவது இடமும், க்யூட்டான போட்டியாளராக இருந்து வரும் ஜனனி மூன்றாவது இடமும், ஏடிக்கேவுக்கு நான்காவது இடமும் கிடைத்துள்ளது. அதில் கடைசி இடத்தை மிக குறைந்த வாக்குகளை பெற்று சீரியல் நடிகை ரக்ஷிதா மற்றும் மணிகண்டா இருவரும் இருந்து வரும் நிலையில் இவர்களுக்கிடையே கடும் போட்டியின் நிலைமை வருகிறது.
ஏனென்றால் இவர்களுக்கு இடையே இருக்கும் ஓட்டு வித்தியாசம் மிகவும் குறைவுதான் எனவே இந்த வாரம் இவர்கள் இருவரில் ஒருவர் வெளியேறப் போகிறார். இருந்தாலும் தற்பொழுது ரட்சிதா சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கும் நிலையில் கொஞ்சம் ஓட்டு வித்தியாசத்தில் தப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.