நடிகர் அஜித் குமார் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக மாறியுள்ளார் காரணம் அவரது படங்கள் ஒருபக்கம் சூப்பர் ஹிட் அடித்தாலும் அவரது நேர்மையை செயல்பாடுகள் அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்துப் போய் உள்ளதால் அவரை எப்பொழுதுமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.
அவரும் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்கிறார் அந்த வகையில் பல்வேறு தடைகளை தாண்டி ஒருவழியாக பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது வலிமை படம் சிறப்பாக இருப்பதால் பொதுமக்கள் படத்தை பார்த்து கண்டு களிக்கின்றனர்.
இதனால் வசூலில் அடித்து நொறுக்கிக் கொண்டே போகிறது ஒருபக்கம் வலிமை சிறப்பாக ஓடிக் கொண்டிருக்க மறுபக்கம் இந்த வருடமும் இன்னும் ஒரு படத்தை கொடுக்க மீண்டும் ஹச். வினோத்துடன் அஜித் மீண்டும் கை கோர்த்துள்ளார். இந்த படத்தின் பூஜை 9ம் தேதி போடப்பட்டு வெகுவிரைவிலேயே சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.
தனது 61திரைப்படத்திற்காக அதிரடியாக உடல் எடையைக் குறைத்து ரெடியாக இருக்கிறார் அஜித். இது இப்படி இருக்க இன்னொரு தகவலும் தற்போது கிடைத்துள்ளது. நடிகர் அஜித்குமார் வெகு விரைவிலேயே இயக்குனர் சுதா கொங்கரா அவர்களுடன் இணைய உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்,
அப்போது அவர் சொன்னது : இயக்குனர் சுதா கொங்கரா அஜித்திற்காக ஒரு செம்ம ஸ்கிரிப்ட்டை வைத்திருக்கிறார் நிச்சயம் இருவரும் இணைய உள்ளனர் அந்த படம் வெளிவந்தால் மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெறும் அதன் மூலம் இயக்குனர் சுதா கொங்கரா அவர்களின் சினிமா பயணமும் அசுர வளர்ச்சியை எட்டும் என கூறியுள்ளார்.