தமிழ் சினிமாவில் பிறமொழி நடிகரின் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அதிலும் குறிப்பாக மலையாள நடிகைகள் சொல்லவே வேண்டாம் பல நடிகைகள் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக தற்பொழுது வலம் வருகின்றனர். அவர்களை தொடர்ந்து மலையாள சினிமாவிலிருந்து தமிழ் சினிமா பக்கம் தற்போது அடி எடுத்து வைத்து உள்ளவர்தான் நடிகை பிரியங்கா மோகன்.
இவர் முதலாவதாக நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “டாக்டர்” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் இந்தப் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவரது பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது அதன் காரணமாக தற்போது பல்வேறு திரைப்படங்களில் இவர் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து “டான்” திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதன்பிறகு பல்வேறு நடிகர்கள் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி உள்ளதால் இவரது மார்க்கெட் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் ரசிகர்கள் தான் நீண்ட தூரம் அழைத்து செல்வார்கள் என்பதால் புகைப் படங்களையும் வெளியிட தொடங்கியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் போதாக்குறைக்கு இவர் அண்மையில் சீரியல் நடிகையும் மாடல் அழகிமான ஒருவருடன் இணைந்து செய்த வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
அந்த சீரியல் பிரபலம் வேறுயாருமல்ல பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக இதுவரை நடித்து வந்த ரோஷினி என்பவருடன் தான் அவர் வீடியோ செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#actress #PriyankaMohan pic.twitter.com/Ne8VV0H7j1
— Tamil360Newz (@tamil360newz) November 23, 2021