திரையுலகில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறி உள்ளவர் நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக பல்வேறுபட்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார். தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் சேதுபதியுடன் காதல் வாக்குல ரெண்டு காதல், சோலோவாக நெற்றிக்கண் போன்ற அடுத்தடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் நடிகை நயன்தாராவுடன் பிரபல பின்னணி பாடகி பிரகதி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது பாடகி பிரகதி பரதேசி, காதலும் கடந்து போகும் உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்பாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறைமையை வெளிக்காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரகதி இன்ஸ்டா பக்கத்தில் அவ்வபொழுது அதிரடியான படங்களை வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் பிரகதி நடிகை நயன்தாராவை கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை பார்பதோடு மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை ஷேர் செய்தும் வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.